அரேபியாவில் ஒரு பணக்கார யூத வியாபாரி
இருந்தான். அவன் சொத்தை எப்படியாவது
பிடுங்டுக் கொள்ளவேண்டுமென்று அந்த நாட்டு பாதுஷாவுக்கு ஆசை. அதற்காக அந்த யூதனைக்
கூப்பிட்டு ஒரு கேள்வி
கேட்டார்.
"முகம்மதிய மதம், யூத மதம், கிறிஸ்தவ மதம்,
இம் மூன்றினும் எது சிறந்தது?” என்று கேட்டார்.
முகம்மதிய மதம் சிறந்தது என்று பதில்
சொன்னால், முகம்மதியனாக மாறு என்று சொல்வது. மற்ற இரு மதங்களில் ஏதாவதொன்றை சிறந்தது என்று சொன்னால், ஏன் முகம்மதிய மதத்தை. இழிவுபடுத்தினாய்?' என்று சிறையிலிடுவது என்று பாதுஷா தீர்மானித்து வைத்திருந்தார்.
ஆனால் யூத வியாபாரி சாமர்த்தியசாலியாதலால் பின்வருமாறு பதில் அளித்தான்.
"ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருக்
தான். அவனிடம் விலை மதிக்க முடியாத ரத்தினக்கல் ஒன்று இருந்தது. தனக்குப். பிள்ளைகளோ
மூன்று, கல்லோ ஒன்று. என்ன பண்ணுவது என்று அவன் யோசித்தான்.
ஒருசிறந்த இரத்தின வியாபாரியிடம் தன்னிடம்இருக்கும் இரத்தினக் கல்லைப் போலவே வேறு இரண்டு போலிக் கற்களை இரகசியமாக வாங்கி வைத்தான்.
தன் அந்திய காலம் நெருங்கிய உடன் ஒவ்வொரு பிள்ளையையும் தனித் தனியே வரவழைத்து ஒவ்வொரு ரத்தினக் கல்லைக் கொடுத்து,
"நான் உன்னிடம்தான் இச்த ரத்தினக் கல்லை ஒப்புவிக்றேன். இதை நான் உன்னிடம் கொடுத்திருப்பதாக மற்றவர்களிடம் தெரிவிக்காதே!' என்று சொல்லி விட்டுத் தனக்குப் பிடித்தமான பிள்ளையிடம் உண்மையான ரத்தினக் கல்லைக்
கொடுத்துவிட்டு இறந்து போனான். ஒவ்வொரு பிள்ளையும் தன்னிடம் இருப்பதுதான் உண்மையான இரத்தினக் கல் என்று நினைத்து மூவரும் ரொம்பவும் ௮ன்னியோன்யமாக வாழ்ந்து வந்தனர்.அதுபோல அவரவர் தங்கள் தங்கள் மதந்தான் உண்மையான மதம் என்று நினைத்துக்கொள்ள
லாம். ஆனால், உண்மையான மதம் எது என்பது, மேற்படி. பணக்காரனைப்போல், ௮வற்றை உண்டு பண்ணிய தெய்வத்திற்குத்தான் தெரியும்.” என்றான்.
யூதனின் பதிலைக் கேட்ட பாதுஷா அவனுடைய புத்தி சாதுர்யத்திற்கு மெச்சி நிறையச் சன்மானம் கொடுத்து ௮னுப்பினார்.
No comments:
Post a Comment