Monday, 12 May 2025

வெற்றி வேண்டுமா? பத்து நுணுக்கங்கள்



வாழ்க்கையில்‌ வெற்றி பெற ஒவ்வொருவரும்‌ மிகுந்த 
துன்பப்‌ படவேண்டும்‌. அப்படிச்‌ செய்யாமல்‌ ஏனோ தானோ 
என்றிருந்தால்‌ எவரும்‌ வெற்றி பெறவே முடியாது. 
உதாரணமாக ராக்பெல்லர்‌, வாழ்க்கையில்‌ வெற்றி பெற்றதைப்‌ பாருங்கள்‌. இரண்டு டாலர்‌ கூலிக்காக முப்பது மணி நேரம்‌ உருளைக்கிழங்கு வயலில்‌ வேலை செய்த ராக்பெல்லர்‌, பிற்காலத்தில்‌ உலகிலே கோடீஸ்வரராக 
பிரபலம்‌ அடைந்ததற்கு அவருடைய தளராத உழைப்புத்தான்‌ முக்கிய காரணமாகும்‌. ராக்பெல்லர்‌ ரொம்பவும்‌ ஏழ்மையான குடும்பத்தில்‌ பிறந்தவர்‌. விவசாயத்‌ தொழிலில்‌ அவருக்கு நன்கு ஆர்வம்‌ 
இருந்தது. வாழ்க்கையை நடத்த அவர்‌ முதலில்‌ உருளைக்கிழங்கு வயலில்‌ வேலை செய்து வந்தார்‌. முப்பது மணிநேரம்‌ வயலில்‌ அவர்‌ வேலை செய்தால்‌ இரண்டு டாலர்‌ கூலி கிடைக்கும்‌. வேலை அதிகமாகவும்‌ கூலி குறைவாகவும்‌ 
இருக்கிறதே என்று அவர்‌ பார்க்கவில்லை. அதற்குப்பதில்‌ 
தம்முடைய வேலையில்‌ கண்ணும்‌ கருத்துமாக இருந்து வந்தார்‌. 
உருளைக்கிழங்கு வயலில்‌ வேலை போன பிறகு அவர்‌ பல தொழில்களைச்‌ செய்திருக்கிறார்‌. ஒவ்வொரு வேலையிலும்‌ அவர்‌ முழுக்‌ கவனத்தையும்‌ செலுத்தி, செய்யும்‌ தொழிலைப்‌ பற்றி நன்கு தெரிந்து கொண்டார்‌. நாளடைவில்‌ 
அவர்‌ சொந்தமாகவே ஏதாவது தொழில்‌ நடத்தவேண்டும்‌ 
என்று எண்ணினார்‌. அதன்‌ காரணமாக அவர்‌ ஸ்டாண்டர்ட்‌ 
ஆயில்‌ கம்பெனி என்ற ஒரு மோட்டார்‌ எண்ணெய்க்‌ கம்பெனியை ஏற்படுத்தினார்‌. அவருடைய விடா 
முயற்சியாலும்‌, அயராத உழைப்பாலும்‌ அக்கம்பெனி சிறிது 
காலத்திலேயே மிகப்‌ பெரியதாக ஆகியது. தற்காலம்‌ அக்கம்பெனி உலகத்தின்‌ எண்ணெய்‌ ஏற்றுமதியையும்‌, விலையையும்‌ நிர்ணயிக்கக்கூடிய வகையில்‌ வளர்ந்து உன்னதமான நிலைக்கு வந்து விட்டது. ராக்பெல்லர்‌, வாழ்க்கையில்‌ தாம்‌ வெற்றி பெற்றதற்குக்‌ கடைப்பிடித்த முறையை அவரே கூறிருக்கிறார்‌. அதை மற்றவர்களும்‌ பின்பற்றி, எல்லோரும்‌ அவரைப்‌ போல்‌ 
முன்னுக்கு வரவேண்டும்‌ என்று விரும்பினார்‌. அதற்காக 
அவர்‌ எங்கு சென்றாலும்‌ தாம்‌ வெற்றி கொண்ட ரகசியத்தை 
பிரசாரம்செய்து கொண்டிருந்தார்‌. ராக்பெல்லரின்‌ பத்து கொள்கைகள்‌ 
** வெற்றிப்‌ பாதையை நோக்கிச்‌ செல்லுங்கள்‌.உண்மையாகவும்‌, நம்பிக்கையடனும்‌ இருங்கள்‌. 
மனதைத்‌ தளர விடாதீர்கள்‌. 
உண்மையைக்‌ கடைப்பிடியுங்கள்‌. 
நீங்கள்‌ இல்லாவிட்டால்‌, முதலாளிக்குப்‌ பெருத்த நஷ்டம்‌ என்று அவர்‌ எண்ணும்‌ படியாகச்‌
சாமர்த்தியமாக வேலையைச்‌ செய்யுங்கள்‌. சிறு உத்தியோகத்தில்‌ சேர்ந்து பெரிய பதவிக்கு வரவேண்டும்‌. பிறர்‌, உங்களிடம்‌ எதிர்பார்ப்பதை விட அதிகமாகச்‌ செய்யுங்கள்‌. செய்யும்‌ தொழிலைப்பற்றி நன்றாக அறிந்து 
கொள்ள வேண்டும்‌. 
கஷ்டப்பட்டு வேலை செய்யாவிட்டால்‌ 
வாழ்க்கையில்‌ சந்தோஷத்தையே காண முடியாது. விளையாட்டுகளில்‌ மனதை ஓடவிடக்கூடாது. 
இந்தப்‌ பத்து விஷயங்களையும்‌ ஒருவர்‌ கடைப்‌ 
பிடித்தால்‌ கட்டாயம்‌ வாழ்க்கையில்‌ வெற்றி பெறுவர்‌** என்று 
ராக்பெல்லர்‌ நம்பிக்கையுடன்‌ கூறியிருக்கிறார்‌.

மதம் என்பது

அரேபியாவில்‌ ஒரு பணக்கார யூத வியாபாரி 
இருந்தான்‌. அவன்‌ சொத்தை எப்படியாவது 
பிடுங்டுக்‌ கொள்ளவேண்டுமென்று அந்த நாட்டு பாதுஷாவுக்கு ஆசை. அதற்காக அந்த யூதனைக்‌ 
கூப்பிட்டு  ஒரு கேள்வி 
கேட்டார்‌.  
"முகம்மதிய மதம்‌, யூத மதம்‌, கிறிஸ்தவ மதம்‌, 
இம்‌ மூன்றினும்‌ எது சிறந்தது?” என்று கேட்டார்‌. 
முகம்மதிய மதம்‌ சிறந்தது என்று பதில்‌ 
சொன்னால்‌, முகம்மதியனாக மாறு என்று சொல்‌வது. மற்ற இரு மதங்களில்‌ ஏதாவதொன்றை சிறந்தது என்று சொன்னால்‌, ஏன்‌ முகம்மதிய மதத்தை. இழிவுபடுத்தினாய்?' என்று சிறையிலிடுவது என்று பாதுஷா தீர்மானித்து வைத்திருந்தார்‌. 
ஆனால்‌ யூத வியாபாரி சாமர்த்தியசாலியாதலால்‌ பின்வருமாறு பதில்‌ அளித்தான்‌. 
"ஒரு ஊரில்‌ ஒரு பெரிய பணக்காரன்‌ இருக்‌ 
தான்‌. அவனிடம்‌ விலை மதிக்க முடியாத ரத்தினக்‌கல்‌ ஒன்று இருந்தது. தனக்குப்‌. பிள்ளைகளோ 
மூன்று, கல்லோ ஒன்று. என்ன பண்ணுவது என்று அவன்‌ யோசித்தான்‌. 
ஒருசிறந்த இரத்தின வியாபாரியிடம்‌ தன்னிடம்இருக்கும்‌ இரத்தினக்‌ கல்லைப்‌ போலவே வேறு இரண்டு போலிக்‌ கற்களை இரகசியமாக வாங்கி வைத்தான்‌. 
தன்‌ அந்திய காலம்‌ நெருங்கிய உடன்‌ ஒவ்வொரு பிள்ளையையும்‌ தனித்‌ தனியே வரவழைத்து ஒவ்வொரு ரத்தினக்‌ கல்லைக்‌ கொடுத்து, 
"நான்‌ உன்னிடம்தான்‌ இச்த ரத்தினக்‌ கல்லை ஒப்புவிக்றேன்‌. இதை நான்‌ உன்னிடம்‌ கொடுத்திருப்பதாக மற்றவர்களிடம்‌ தெரிவிக்காதே!' என்று சொல்லி விட்டுத்‌ தனக்குப்‌ பிடித்தமான பிள்ளையிடம் உண்மையான ரத்தினக்‌ கல்லைக்‌ 
கொடுத்துவிட்டு இறந்து போனான்‌. ஒவ்வொரு பிள்ளையும்‌ தன்னிடம்‌ இருப்பதுதான்‌ உண்மையான இரத்தினக்‌ கல்‌ என்று நினைத்து மூவரும்‌ ரொம்பவும்‌ ௮ன்னியோன்யமாக வாழ்ந்து வந்தனர்‌.அதுபோல அவரவர்‌ தங்கள்‌ தங்கள்‌ மதந்தான்‌ உண்மையான மதம்‌ என்று நினைத்துக்கொள்ள 
லாம்‌. ஆனால்‌, உண்மையான மதம்‌ எது என்பது, மேற்படி. பணக்காரனைப்போல்‌, ௮வற்றை உண்டு பண்ணிய தெய்வத்திற்குத்தான்‌ தெரியும்‌.” என்றான்.
யூதனின்‌ பதிலைக்‌ கேட்ட பாதுஷா அவனுடைய புத்தி சாதுர்யத்திற்கு மெச்சி நிறையச்‌ சன்மானம்‌ கொடுத்து ௮னுப்பினார்‌. 

ரயில் ஜோக்

"ரயில்‌ வண்டிகள்‌ 
ரயில்‌ வண்டிகள்‌ எப்பொழுது பார்த்தாலும்‌ 
தாமதமாக ஓடுகின்றனவே. ரயில்வே அட்டவணை 
இருந்து என்ன பிரயோஜனம்‌ ?'' 

"ரயில்வே அட்டவணை இல்லாவிட்டால்‌ ரயில்‌ 
வண்டிகள்‌ தாமதமாகவே ஓடுகின்றன என்று எப்‌ 
படித்‌ தெரியும்‌ ?"

வெற்றி வேண்டுமா? பத்து நுணுக்கங்கள்

வாழ்க்கையில்‌ வெற்றி பெற ஒவ்வொருவரும்‌ மிகுந்த  துன்பப்‌ படவேண்டும்‌. அப்படிச்‌ செய்யாமல்‌ ஏனோ தானோ  என்றிருந்தால்‌ எவரும்‌ வெற்...